கொழும்பு தாக்குதலில் வவுனியாவின் பிரபல வர்த்தகரின் மகள் உட்பட வவுனியா இளைஞன் ஒருவரும் பலி!
கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் மற்றும் வவுனியா வர்த்தகரான PS அப்துல்லா அவர்களின் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய இஸ்தார் முகமத நளிம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தினை வவுனியாவில் இருக்கும் தனது இல்லத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வர்த்தகரின் மகள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றும் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து இருந்தவர் என்றும் அறியமுடிகிறது
குறித்த இளைஞன் அங்கு பணியாளராக கடமையில் இருந்தவர் எனவும் அறியப்படுகிறது
இலங்கையின் ஒன்பது இடங்களில் அதாவது மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்சத்திரக் ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.