கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கொரோனாவில் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறுமாதங்களுக்கு பின் பரிசோதனை செய்யும்போது டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.