Main Menu

குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்

அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பெயரின் அர்த்தம் தொடர்பான தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஆர்ச்சி

இந்த பெயர் ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் மொழிகளிலிருந்து உருவான பெயராகும், மற்றும் ஆர்ச்சிபால்டு என்ற பெயரின் சுருக்கப்பெயராகும்.

இதன் பொருள் தைரியமானவர் என்பதாகும்.

ஹரிசன்

பொதுவாக துணைப்பெயரான இந்த பெயர், தற்போது பல ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் முதல்பெயராக பிரபலமாகி வருகிறது.

அது ஆங்கில மொழியிலிருந்து உருவானது, மற்றும் அதன் அர்த்தம் ஹரியின் மகன் என்பதாகும்.

மவுண்ட்பேட்டன் – விண்ட்சர்

HRH அதாவது His Royal Highness என்று அழைக்கப்படாத அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த துணைப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.

1917க்கு முன், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ துணைப்பெயர் கிடையாது. அவர்கள் தங்கள் வீடுகளின் பெயரைத்தான் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டார்கள்.

எனினும், மகாராணியாரின் தாத்தா ஐந்தாம் ஜோர்ஜ், விண்ட்சர் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.

அத்துடன் மகாராணி விக்டோரியாவின் சந்ததியில் பிறக்கும் அனைத்து ஆண் வாரிசுகளும் இனி தங்கள் பெயருடன் விண்ட்சர் என்ற துணைப்பெயரை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

எலிசபெத் மகாராணியார் பதவியேற்றுக் கொண்டபின், தனது சந்ததியார் அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களிலிருந்து தனிப்பட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்.

எனவே அவர் தனது குடும்பத்தினரின் துணைப்பெயரை மவுண்ட்பேட்டன் – விண்ட்சர் என்று மாற்றினார், மவுண்ட்பேட்டன் என்பது மகாராணியாரின் கணவர் பிலிப்பின் துணைப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.