கிளிநொச்சியில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை
கிளிநொச்சி- கிருஸ்ணர் ஆலயத்தில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை நடத்தப்பட்டது.
அதாவது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாடும் மக்களும் விடுபட வேண்டுமென்ற நோக்கத்தில் கிளிநொச்சி அருள்மிகு கிருஸ்ணர் ஆலயத்தில் யாக சாந்தி பூசை நடத்தப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணிவரை இந்த யாக பூசை உரிய சுகாதார முறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.