காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக அவர்கள் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்திற்கு சந்திரபாபு நாயுடு சென்றார். இருவரும் அரசியல் நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடந்து லக்னோ செல்லும் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்திக்கிறார்.