கமலா ஹரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரிசோனா (Arizona) மாகாணம் டெம்பேவில் கமலா ஹரிஸின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சுடு நடத்தியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்தத காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த போது அலுவலகத்துக்குள் எவரும் இருக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.