கனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு
உலகின் பிற நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையொன்றின் பிரகாரம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கனேடிய அமைப்பினால் இந்த மாற்று காலநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டு முதல் கனடாவின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவின் வடக்கு பகுதி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வடக்கு பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலையானது 2.3 பாகை செல்சியசினால் அதிகரித்துள்ளது.