கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழப்பு!
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவிலானவர்கள் உயிரிழப்பது இதுவே பிரான்சில் முதன் முறை.
கடந்த 24 மானிநேரத்தில் பிரான்சில் 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கஒ 9,134 ஆக அதிகரித்துள்ளது. 3626 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் 931 பேர் மிக மோசமான உடல்நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 931 பேரில் 50 வீதமானவர்கள் அறுபது வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
“நிலமை மிகவும் மோசமாகிக்கொண்டு செல்லும் தொற்றுநோயை நாம் கொண்டுள்ளோம்” என சுகாதார இயக்குனர் jérôme salomon (directeur général de la santé) தெரிவித்துள்ளார்.