ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றது.
இந்த தடுப்பூசிகள் ஆரம்பத்தில் இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.