ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
ஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த படகில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ள நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 8 பேர் காணாமல்போயுள்ளதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.