ஐ.தே.க. இன் அழிவிற்கு சஜித்தே காரணம்- நாமல்
ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் தேவை இருக்கின்றது.
எனவே அவ்வாறான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தேர்தல் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றோம்.
இதேவேளை சஜித் பிரேமதாச, ஐக்கியதேசிய கட்சிக்குள் ஏற்படுத்திய சிக்கல் காரணமானவே கட்சி அழிந்து விட்டது.
இதனால் பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், மனஉலைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்
ஆகவே அவ்வாறான ஆதரவாளர்களையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.