எவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை
எவன்காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8பேரையும் நிரபராதிபதிகளாக கருதி, கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகளான மஞ்சுல திலகரத்ன, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மஹேன் வீரமன் ஆகியோரின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதிகள், அவர்களை நிரபராதிபதிகளாக கருதி விடுதலை செய்துள்ளனர்.
சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் ரவைகள் ஆகியவற்றினை வைத்திருந்ததாகவே எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.