எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் வழங்கவுள்ள இழப்பீட்டு தொகையிலும் மோசடி செய்ய அரசாங்கம் முயற்சி- மனுஷ
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள இழப்பீட்டிலும் அரசாங்கம் மோசடியில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மனுஷ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறும் விடயத்தில் சில சந்தேகம் உள்ளது.
அதாவது கடலில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றபோது, அக்கடற்பரப்பிற்குச் சொந்தமான நாடு பெரியளவில் இழப்பீடுகளைப் பெற முடியும்.
அந்தவகையில் இந்த விபத்திற்கு இழப்பீடு பெறுவது தொடர்பாக சில கேள்விகளை எழுப்புகின்றனர். இதன் பின்னணியிலும் உடன்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும் இலங்கை வரலாற்றில் இத்தகையதொரு அழிவு ஏற்பட்டதில்லை. எனவே கப்பல் நிறுவனத்திடம் இருந்து இந்த அழிவுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் இதற்குத் துணைபுரிந்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டு வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.