உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் : விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய இன்று விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு கூடுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகரவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் இன்றைய தினம் ஆஜராகவுள்ளனர்.
அத்தோடு தெரிவுக் குழு தொடர்பான செய்திகளை நேரடியாக பெற்றுக்கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.