உயிரிழந்தவர்களிற்கு யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி!
இலங்கையை உலுக்கிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாழ். பல்கலை வளாகத்தில் இன்று (22) திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.