“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் திட்டம் யாழில் ஆரம்பம்!
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக வைத்து வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட போக்குவரத்து பிரிவு மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையினை நேற்று முன்னெடுத்திருந்தனர்.