Main Menu

உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

அதே வேளையில், எமது கட்­சியின் நிலைப்­பாட்டை ஏற்றுக் கொண்டு சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்த எமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் நன்றி தெரி­வித்துக் கொள்­கின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

நாட்டின் சில பிர­தே­சங்­களில் சீரற்ற கால­நி­லைக்கு மத்­தி­யிலும் எங்கள் ஆத­ர­வா­ளர்கள் ஜன­நா­யக விழு­மி­யங்கள் மற்றும் தங்­க­ளது வாக்­கு­ரி­மையின் பலத்தை பாது­காக்கும் வகையில் செயற்­பட்­டுள்­ள­மை­யா­னது தொடர்ந்தும் எங்­க­ளுக்கோர் உந்து சக்­தி­யாக அமைந்­துள்­ளது. 

நாடு தழு­விய ரீதியில் அதி­கூ­டிய வாக்­க­ளிப்பு வீதம் பதி­வா­கி­யுள்­ள­மை­யா­னது பொது­மக்கள் ஜன­நா­ய­கத்தின் மீது கொண்­டுள்ள நம்­பிக்­கையை பிர­தி­ப­லிக்­கின்­றது. ஆனாலும் வாக்­க­ளிப்பு நடந்த விதம் எமது சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஆழ­மான துரு­வப்­ப­டுத்­தலை வெளிக்­காட்­டு­கின்­றது.

ஆனாலும் சகல இலங்­கை­யர்­க­ளி­னதும் நலன் கரு­திய செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான கடி­ன­மான முடி­வு­களை எடுப்­பதில் பலத்த சவால்­களை நீங்கள் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­தல், சட்­டத்தின் ஆட்சி , நாட்டின் பன்­மு­கத்­தன்மை மற்றும் ஜன­நா­ய­கத்தின் பெறு­ம­திகள் என்­ப­வற்றை போஷிப்­ப­தற்­கான செயற்­பா­டு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. உங்­க­ளது நிர்­வா­கத்தின் கீழ் அமைதி, ஒற்­றுமை, இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் சகல இனங்­க­ளுக்கும் மத்­தியில் நிலைத்து நிற்கக் கூடிய நல்­லெண்ணம் என்­ப­வற்­றுக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்று நம்­பு­கின்றோம். 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லா­னது சமூக ஸ்திரத்­தன்மை மற்றும் பாது­காப்பு என்­ப­வற்றில் மன்­னிக்க முடி­யா­ததும், அழிக்க முடி­யா­த­து­மான வடுவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­த­கைய பார­தூ­ர­மான அனர்த்­தத்தின் உண்மைத் தன்­மையை கண்­ட­றி­வ­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழுவின் முயற்­சி­களில் எதிர்க்­கட்சி பங்­கு­பற்­றாமை ஒரு கறை­யாக படிந்­துள்­ளது. அத்­துடன், தேர்தல் பரப்­பு­ரை­களின் போது தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் மீது அநீ­தி­யா­னதும், அடிப்­ப­டை­யற்­ற­து­மான குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டதும் வருந்­தத்­தக்­கவை.

எவ்­வா­றா­யினும், தேர்தல் பெறு­பே­று­களை உற்­று­நோக்­கு­கையில், பெரும்­பான்மை மேலா­திக்க மனோ­பா­வ­முள்ள நாட்டில் சகல சமூ­கத்­தி­ன­ரையும் உள்­ள­டக்­கிய ஒன்­று­பட்ட தேச­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான புதிய வாய்ப்­பொன்று கிட்­டி­யுள்­ளது. 

தேர்­த­லோடு ஒட்­டி­ய­தான இனங்­க­ளுக்­கி­டை­யான துரு­வப்­ப­டுத்­தலை நீக்கும் முயற்­சிகள் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.  வெவ்­வேறு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் மற்றும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­கான சந்­தர்ப்­ப­மொன்று உங்­க­ளுக்கு வாய்த்­துள்­ளது.  இலங்கை முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆணையைப் பெற்ற கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் புதிய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உங்­களை வாழ்த்­து­கின்­றது. 

வர­லாறு அதற்­கான சாள­ர­மொன்றை மீண்டும் ஒரு­முறை உங்­க­ளுக்குத் திறந்து தந்­துள்­ளது. இவ்­வா­றான ஒரு சந்தர்ப்பம் 2009ஆம் ஆண்டில் யுத்த நிறைவின் பின்னர் உங்களுக்கு முன்னொரு தடவையும் கிட்டியிருந்தது. உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் கணிசமானோரின் மனங்களை வென்றெடுத்து, இனங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக அமைவதற்கும், குறுகிய வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற மனப்பதிவை ஏற்படுத்துவதற்கும் முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்.

பகிரவும்...