இஸ்ரேல் மோதல் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், குறித்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.