இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
இஸ்ரேலில் ஐந்தாவது முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ எண்ட் வயிட் கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அரசில் மொத்தமாக 36 அமைச்சர்கள், 16 இணையமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இஸ்ரேல் அரசு வரலாற்றிலேயே இத்தகைய எண்ணிக்கையுடன் மிகப்பெரிய அமைச்சரவை அமைவது இதுவே முதல் முறையாகும்.
புலம்பெயர்ந்தோர் விவகாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஒமேர் யான்கெலெவிச், இஸ்ரேல் அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். எத்தியோபியாவில் பிறந்து பின்னர் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற நினா தமானோ ஷதா குடியேற்றத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த யாரிவ் லெவின் நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் கடந்த மார்ச் மாதம் என மூன்று முறை நடைபெற்ற தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை இந்த நிலையில், மேலும் ஒரு தேர்தலைத் தவிர்க்கும் வகையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் நெதன்யாகு மற்றும் முன்னாள் இராணுவத் தலைவரான காண்ட்ஸ் ஆகியோர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும். 18 மாதங்களுக்கு நெத்தன்யாகு பிரதமராக பதவி வகிப்பார். அடுத்த 18 மாதங்களுக்கு காண்ட்ஸ் பிரதமராக பதவி வகிப்பார்.
பகிரவும்...