Main Menu

இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது.

கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையை நிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கும் தீர்மானமொன்றை  புதிய ஜனநாயக கட்சி தீர்மானமொன்றை கனடாவின் பொதுச்சபையில் சமர்ப்பித்தது – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் இணைந்துள்ள இந்த கட்சி காசாவில் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு கனடா அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்ததீர்மானம் கனடாவின் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் இந்த தீர்மானம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

பகிரவும்...
0Shares