இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!
இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து அவன்கார்ட் நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கை தொடர முடியாது என்றும் பிரதிவாதிகள் எழுப்பிய முதற்கட்ட ஆட்சேபனையை நிராகரித்ததாக சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளதாகவும், ஜூலை 15 ம் திகதி மனு மீதான விசாரணை விரும்போது வழக்கு திரும்பப் பெறப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நிபந்தனைக்கு உட்பட்டு, அவரது தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்த திருத்த மனுவை மீளப் பெற்றதாக சட்டத்தரணி அஜித் பதிரன தெரிவித்தார்.
பகிரவும்...