இலங்கை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர்தப்பியுள்ள நடிகை ராதிகா!

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது.
இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

‘’சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்தது, இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நம்ப முடியவில்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தினமான இன்று நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் இலங்கை முழுதும் பதற்றம் நிலவுகின்றது.