இலங்கை குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலும் சில ஆதாரங்களை வௌியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ்!
கடந்த 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்த முற்கூட்டிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் ஏலவே அறிந்திருந்தமைக்கு மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, த நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
உயர்ந்த இரகசியம் என்ற குறிப்புடனான புலனாய்வு ஆவணம் ஒன்று காவற்துறை மா அதிபருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்தினால் இலங்கையில் பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அனுப்ப்பபட்டு 12 தினங்களின் பின்னர் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.