இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்து உள்ளதாக கவலை!
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகத்தினரே கொரோனாவை திட்டமிட்டு பரப்பி வருவதாக சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் குறித்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கங்கள் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன், பொறுப்புக்கூறல், சாட்சிகளை பாதுகாத்தல் தொடர்பில் பிரேரணையொன்றை கொண்டு வருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.