Main Menu

இலங்கையில் சமூக வலைத் தளங்களுக்கு தடை – அரசாங்கத்தின் பேச்சிவார்த்தை தொடர்கிறது

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பதிவுகள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் செய்யப்படுகின்றமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பல தடவைகளில் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.