இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரான்சில் வசிக்கும் இலங்கையர்களிடம் கருத்தறிதல் ஆலோசனை கோரல்
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரான்சில் வசிக்கும் இலங்கையர்களிடம் கருத்தறிதல் ஆலோசனை கோரல்.
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க இலங்கை மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரான்ஸ் வாழும் தாங்களும் தங்கள் சார்பான அமைப்புக்களும்உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க களம் அமைத்திருக்கிறோம்.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பாக, தங்களது ஆலோசனைகளை முன்வைக்க வசதியாக பின்வரும் கட்டளை விதிகள் தரப்பட்டுள்ளன.
01) அரசின் தன்மை
02) அரசியல் அமைப்பின் தன்மை (நிறைவேற்று ஜனாதியதி முறையா? அல்லது பாராளுமன்ற முறையா?
03) அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கம்
04) குடியுரிமை, மதம், அடிப்படை உரிமைகளும் கடமைகளும், மொழி உரிமை, அமைப்புக்களுக்கான உரிமை மற்றும் அரசின் கொள்கைகளைத் தயாரிக்கும் அடிப்படைத் தர்மம்.
05) அரசியல் அமைப்பு (ஒரே சபை/ பல சபைகள்)
06) பாராளுமன்றின் சுதந்திரம் / அரசியலமைப்பின் சிறப்புத் தன்மை
07) அரசியல் அமைப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிச் சேவை ஆகியவற்றுக்கிடையிலான அதிகார பகிர்வு
08) நீதிமன்றங்களின் சுதந்திரம் மற்றும் நீதிமன்றங்களின் அமைப்பு
09) அரசியல் அமைப்புச் சபை
10) கூட்டு அதிகாரம், அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண நிர்வாகம்
11) களத்தில் கூட்டு அதிகாரங்கள்
12) அரசியல் அமைப்பு சபையும் சுதந்திரமான ஆணைக் குழுக்களும்
13) அரசாங்க சேவை
14) தேர்தல் மறுசீரமைப்பு
15) மசோதாக்கள் தொடர்பான நீதிமன்றங்களின் அவதானிப்பு
16) நாடாளுமன்ற நடைமுறையின்கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்கள்
17) நாடாளுமன்ற நடைமுறையின்கீழ் ஜனாதிபதியின் நியமனம்
18) பொதுமக்களின் பாதுகாப்பு
19) அடிப்படைத் தன்மை
20) ஏனையவை
மேலே தரப்பட்ட கட்டளை விதிகள் அனைத்திற்குமோ அல்லது சிலவற்றிற்கோ தங்களது ஆலோசனைகளைச் சுருக்கமாக எழுத்தில் மார்ச் 09-ம் திகதிக்கு முன்னர் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இலங்கையிலிருந்து வரும் பிரதிநிதிகள் குழுவிடம் தங்கள் ஆலோசனைகளை வழங்கச் சந்தர்ப்பம் வழங்கும் விதத்தில் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் மார்ச் 20-ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு பாரிஸ் நகரில் சந்திப்பதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாங்கள் / தங்கள் அமைப்பினர் இந்தப் பிரதிநிதிகளின் சந்திப்பில் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கு பங்குபற்ருவதுசம்பந்தமாக மார்ச் 12-ம் திகதிக்கு முன்னர் தயவு செய்து அறியத் தரவும்.
பிரதிநிதிகள் குழுவில் தங்களது ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க நேரத்தை ஒதுக்குவது மற்றும் அதற்கான வசதிகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் தங்களது உரிய பதிலிலேயே தங்கியுள்ளது என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தங்களது எழுத்துபூர்வமான ஆலோசனைகளை கீழ்க்கண்ட மின் அஞ்சலுக்கோ அல்லது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு எமது பிரதிநிதிகளிடம் கையளிக்க முடியும்.
மின் அஞ்சல் : fflsh.france@gmail.com
தொலைபேசி :
06 51 64 82 00 – அத்திகே நிமல்
06 51 47 80 31 – அயிவன் பஸ்நாயக்க
07 53 29 70 06 – சரவணா சுப்பிரமணியம்
06 52 81 52 49 – கபீர் கமோர்டீன்
06 61 79 03 41 – அஜந்த கல்தேரா
07 53 91 11 31 – சுனில் காமினி
இலங்கை மனித உரிமை ஒத்துழைப்புச் சங்கம்
பகிரவும்...