இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் நாடு கடத்தியது பிரான்ஸ் அரசு
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரான்ஸ் தீவுக்கு கடந்த 13ஆம் திகதி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.
சிறப்பு விமானம் மூலம் 60 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ரீயூனியன் தீவுக்கு வருவதற்காக இலங்கையர்கள் ஒருவருக்கு 2,000 – 5,000 யூரோஸ் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படகில் இலங்கையர்களை அழைத்து வந்ததாக கூறி இந்தோனேசியாவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.