இறக்கும் முன்னர் நீதியை வழங்குங்கள்!! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை

தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்னர்.
இதன்போது ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், அவர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே இறந்துள்ளனர் எனவும் ” போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மீதமுள்ளவர்கள் மரணிப்பதற்கு முன்பாவது தமக்கான நீதியினை பெற்றுத் தருமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு கொலைக்குற்றங்களை செய்த அரச படைகளை விசாரிக்க இயலாத அரசாங்கம் தமிழ் இனத்தை ஏமாற்றி வருகின்றது எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் எதிர்வரும் ஐநா கூட்டத்தொடரிலாவது தமக்கான சர்வதேச நீதிப்பொறிமுறையூடான நீதி வழங்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...