இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கையில்
இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பதற்காக மிலினோகட் மற்றும் ஸ்பர்னஸ் ஆகிய அமெரிக்க போர்க் கப்பல்கள் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரால் அக்கப்பல்களின் பணிக்குழாமினர் வரவேற்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர்க் கப்பல்களுடன் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ள கூட்டு கடற்படை பயிற்சிகளில் சயுரல மற்றும் சமுத்ரா ஆகிய கடற்படை படகுகளும் கலந்து கொள்ளவுள்ளன.