இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும் சிறைச்சாலையை தாங்கள் கைப்பற்றியதாக தலிபான்கள் கூறுகின்றனர்.
வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று காபூலின் புறநகர்ப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.