Day: August 15, 2021
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வார அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 1 ஆம் திகதிவரையான நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுமேலும் படிக்க...
லெபனான் எரிபொருள் தொட்டி வெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
வடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் போது சுமார் 200 பேர் அருகில்மேலும் படிக்க...
இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும்மேலும் படிக்க...
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்- மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா
சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்த முதலமைச்சர், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து,மேலும் படிக்க...
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு நிகழ்வுகள்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள்- குற்ற ஆவணங்களை வைத்திருந்த சந்தேக நபர் இருவர் இந்தியாவில் கைது!
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் மற்றும் பல்வேறுப்பட்ட குற்ற ஆவணங்களை வைத்திருந்த சந்தேகநபர் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர், சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய மேலும் படிக்க...
மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது திருமண மண்டபங்களில் மறு அறிவித்தல் வரை திருமணத்தை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வாமேலும் படிக்க...
ஹைட்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அவசரகால நிலை பிரகடனம்
கரீபியன் நாடான ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 304 பேர் உயிரிழந்ததுடன் 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேற்கு துறை, தெற்கு துறை, நிப்பேஸ்மேலும் படிக்க...
இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன்
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்மேலும் படிக்க...