இமயமலை ஏற முற்பட்ட இரு இந்தியர்கள் பலி
இந்தியா – நேபாள நாடுகளுக்கு இடையில் உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா (Kanchenjunga) மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
உலகில் 3வது உயர்ந்த மலையான குறித்த மலையில் அதிகளவில் மலையேறும் குழுவினர்கள் மலையேறும் சாகசங்களை செய்துவருகின்றனர்.
இந்தநிலையில், அதில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைவடைந்ததாலும் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது அவர்களின் சடலங்கள் மீட்பு குழுவினரினால் மீட்கப்பட்டுள்ளன.