Main Menu

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலே ஈ.பி.டி.பி.யில் போட்டியிடுகிறேன் ; கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜித்த தேரர்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துபோட்டியிட தீர்மானித்தேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லிணக்க கொள்கையை பாராளுமன்றத்தில் அனுமதித்து நாடுபூராகவும் கொண்டு செல்வதே எமது திட்டம். இன,மத அடிப்படையில் செயற்படாமல் அனைவரும் இலங்கையர்கள் என செயற்படுவதே கோரிக்கையாகும்.

இந்த நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

அனைத்து இன மதத்தலைவர்களும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவே ஸ்திரமான பொருளாதாரமாக அமையும். பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பி முன்னேற்றமடைந்த நாடாக நாடாக மாற்றுவதற்கே ஜனநாயக கட்சியில் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்தேன்.

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் இலங்கையர்களாக செயற்படும் சூழல் ஏற்படும்போதுதான் நாட்டின் பொருளாதாரதத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும்.

அதற்காக கொழும்பு மக்கள் இந்த தேர்தலில் இன நல்லிணக்கதை கட்டியெழுப்ப எமக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

பகிரவும்...
0Shares