இந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் 41 தீவிரவாதிகள் வேட்டையாடபட்டு இருப்பதாகவும், அவர்களில் 25 தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறினர்.
13 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனக் கூறிய அதிகாரிகள்,
பள்ளத்தாக்கில், ஜெய்ஷ் இ இயக்கத்தின் தலைவனாகப் பொறுப்பேற்க எந்த தீவிரவாதியும் முன் வரவில்லை என்றும் குறிப்பிட்டனர்.