இந்தோனேசியச் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட கைதிகள்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறைச்சாலையில் இன்று அதிகாலை மூண்ட கலவரத்தையும் தீயையும் தொடர்ந்து கைதிகள் தப்பியதாக அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் பிடிபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
தப்பியோடிய மற்ற கைதிகளைத் தற்போது தேடிவருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
கலவரம் நடந்த சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 650 கைதிகள் இருந்தனர்.
சம்பவத்தில் 3 பேருக்குக் கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டதாகவும், ஓர் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் உட்கொண்ட சில கைதிகளை அதிகாரிகள் அடித்த போது கலவரம் மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.