இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென இராணுவ ஹெலிகொப்டர்கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை 11.47 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது தரையிறங்க 5 நிமிடமே இருந்தநிலையில் மதியம் 12.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தனர். ஹெலிகொப்டர் வெடித்து சிதறியதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.