இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல்
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதனைத் தடுக்க, தேர்தல் ஆணையகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 2464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமிழகத்தில் மொத்தம் 475.95 கோடி ரூபா பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது