இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள சிக்கல்களுக்கு சுமூகத்தீர்வு காண நடவடிக்கை! பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள மோதல்களை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இதன் வாயிலாக, இருதரப்பும் எதுவும் பயனடையவில்லை எனவும் எனவே அண்டை வீட்டார் போல் அமைதியான முறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை அமர்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசி தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் தாக்குதலை எதிர்த்து, தன் நாட்டின் படைவீரர்களும், ஒட்டுமொத்த தேசமும் போரிட்ட விதம் ஒப்பற்றது எனவும் நாட்டின் ராணுவ வரலாற்றில் இது ஒரு பொன்னான அத்தியாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவினால், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
பகிரவும்...