இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.