Main Menu

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO!

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது.

அந்த வகையிலேயே இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு மேற்படி பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரொனா தொற்றுக்கு ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் இனங்காணப்பட்ட வைரஸிற்கு பீட்டா எனவும், பிரேசில் கொரோனா தொற்றுக்கு காமா எனவும் அமெரிக்க கொரோனா தொற்றுக்கு எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.