ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை
ஆஸ்திரேலியப் பொது தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொழில் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி முன்னணியில்….
தொழில் கட்சி – 52 இடங்கள்
ஆளும் மிதவாதக் கூட்டணி – 48 இடங்கள்
ஒருவேளை தொழில் கட்சி வெற்றிபெரும்பட்சத்தில் அதன் தலைவரும், முன்னாள் தொழிலாளர் இயக்கத் தலைவருமான பில் ஷார்டன் (Bill Shorten) ஆஸ்திரேலியப் பிரதமராவார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.