ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், 8 பேர் கைது
யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில , 8 பேரை மானிப்பாய் காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க துணை நடிகர்கள் – பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்!