ஆசிரியர் -மாணவர் ஜோக்ஸ்

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்…
JJJJJ
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா…
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்… கதையை நான் சொல்றேன்…
JJJJJ
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்…
மாணவன்: என்ன கேட்டீங்க…?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது…ன்னுட்டான்.
JJJJJ
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்…
மாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்…
JJJJJ
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்…
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்…
JJJJJ
ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.
JJJJJ
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!
JJJJJ
ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்.
JJJJJ
“ஏண்டா…பொய் சொன்ன?” “இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு” என மாணவனை அடி அடியேன அடித்தார் ஆசிரியர்.
“இனி மேலும் பொய் சொல்வேன் மாணவன்” என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
ஆசிரியர் திகைத்து போய், “ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?” என்றார்.
மாணவன் சொன்னான், “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே சார்…!”
JJJJJ
ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கெட்டார்
அதற்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்
JJJJJ
ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும் போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!
JJJJJ
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..!