அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால், அக்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என கூறப்பட்டது.
எனினும் பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.