அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் ஆரம்பம்
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி’ கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, சேர். மார்கஸ் பெர்னாண்டோ வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தை நடத்த தீர்மானித்திருந்தது.
இதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பேருந்துகளில் கொழும்பிற்கு வரவிருந்த நிலையில் வீதி தடைகள் ஏற்படுத்தி பேருந்துகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் போராட்டத்திற்கு சென்றவர்களுக்கும்,பொலிஸாருக்கும் இடையில் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.