அயர்லாந்தின் பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை
வடக்கு அயர்லாந்தின் லண்டன் டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் இளைஞர்கள் என வட அயர்லாந்தின் பொலிஸ் சேவை இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
கொலை தொடர்பாக துப்பறிவாளர்கள் குழுவின் உதவியுடன் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன்டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது, 29 வயதான லைரா மெக்கீ என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.