Main Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: டேனிஸ் ஷபலோவ்- நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், நான்காவது சுற்றுப் போட்டியில், டேனிஸ் ஷபலோவ், போர்னா கோரிக், நவோமி ஒசாகா, ஷெல்பி ரொஞர்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனிஸ் ஷபலோவ், 6-7, 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், குரேஷியாவின் போர்னா கோரிக், அவுஸ்ரேலியாவின் ஜோர்தான் தொம்சனுடன் மோதினர்.

விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், போர்னா கோரிக், 7-5, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


பெண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவிட்டுடன் மோதினார்.

இப்போட்டியில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் நவோமி ஒசாகா வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஷெல்பி ரொஞர்ஸ், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்குகளில் ஷெல்பி ரொஞர்ஸ், வெற்றிபெற்று காலிறுதிக்குள் காலடி எடுத்துவைத்தார்.