அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான மெட்வதேவ், சிட்சிபாஸ் ஆகியொர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஜோகோவிச்கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், நெதர்லாந்தை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினார்கள்.
ஆரம்பம் முதலே ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-2, இரண்டாவது செட்டை 6-3, மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.