‘அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுக்கும் தயார், சண்டைக்கும் தயார்’ – சீனா
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ளச் சீனா தயாராக இருக்கிறது; அதேசமயம் சமரசப் பேச்சுக்கும் தயாராக உள்ளது என்று சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹே கூறியிருக்கிறார்.
“வர்த்தகப் போரைத் தொடங்கியது அமெரிக்கா. சீனாவைப் பொறுத்தவரை எங்கள் வாசல் திறந்திருக்கிறது. பேச்சுக்கும் தயார்..சண்டைக்கும் தயார்.”
என்றார் ஜெனரல் வெய்.
பெய்ச்சிங்கும் வாஷிங்டனும் கடுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. ஒன்று மற்றதன் மீது வரி விதித்ததில் கடந்த சில மாதங்களில் சர்ச்சைகள் வலுத்தன.
சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் சீனத் தற்காப்பு அமைச்சர் பேசினார்.