அகதிகளுடன் ரியூனியன் தீவினை சென்றடைந்த கப்பல் – மாலுமிகள் கைது
இந்தோனேசியாவில் இருந்து கடந்த முதலாம் திகதி புறப்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய சிறிய கப்பல் 126 தமிழ் அகதிகளுடன் பிரான்ஸ் ரியூனியன் தீவினை அடைந்துள்ளது .
முன்கூட்டியே அவுஸ்ரேலிய கடல் கண்காணிப்பாளர்களால் பிரான்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட சூழலில் இன்று கப்பல் பிரான்ஸ் ரியூனியன் தீவினை சென்றடைந்துள்ளது .
கப்பலை செலுத்திய 3 இந்தோனீசிய மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . 126 தமிழ் அகதிகளில் பலர் இந்தோனேசியா மலேசியா தாய்லாந்து நாடுகளில் ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான அமைப்பின் (UNHCR ) ஊடாக பதிவு செய்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள் . தற்பொழுது இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனித்துவமான விசாரணைகளிற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்